துளசி திருமணச்சேவை சம்பந்தமான விளக்கம்

எமது சேவையில் இணைவதற்கு பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. காரணம் படித்தவர்கள் முதல் பாமரர் வரை எம்மிடம் வரன்கள் தேடுகிறார்கள். எல்லோரும் இணையம் சம்மந்தமான அறிவு இருப்பதில்லை. ஆனால் இன்று எல்லோர் கைகளிலும் வாட்சப்ஆப்  உடன் தொலைபேசி இருக்கிறது. 

எனவேதான் உங்கள் விபரங்களை வாட்சப் ஊடாக அனுப்பினால் நாம் அதனை எமது கணணியில் உங்கள் விபரங்களோடு சேமித்து வைத்து வரன்களை தேடுகிறோம். வாட்சப் இல்லாவிடின் உங்கள் விபரங்களை மின்னஞ்சல் மூலமாக எமக்கு அனுப்புதல் வேண்டும்.

பல்வேறு திருமண சேவை நிறுவனங்கள் உங்கள் விபரங்களை பதிவு செய்வதற்கான பதிவு கட்டணமாக 100 டாலர்கள் அதிகபட்சம் அறவிடுகிறார்கள். ஆனால் எம்மிடம் அந்த சேவை இல்லை. இலங்கை இந்திய உறவுகளாக இருந்தாலும் சரி வெளிநாடுகளில் வாழும் உறவுகளாக இருந்தாலும் சரி பதிவு கட்டணம் நாம் யாரிடமும் அறவிடுவதில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.

உங்கள் விபரங்களின் அடிப்டையில் உங்களுக்கான வரன் தேடிய பிறகு இரு வீட்டாரும் பேசி சம்மதம் என்றவுடன் எமக்கான சேவை கட்டணமாக 800 பிராங்குள் கட்டணம் செலுத்துதல் வேண்டும். (முக்கிய குறிப்பு :- பல இடங்கில் அறவிடப்படும் கட்ணம் 1500 பிராங்குகள்) இலங்கையில் திருமணம் பேசி முடிக்கும் வரன்களுக்கு 1 லட்சம் ரூபாய்கள் கட்டணம் செலுத்துதல் வேண்டும்.

கட்டண விபரங்கள் எமது நிலையான கட்டண விபரங்கள் ஆகும். இடையில் அதிக கட்டணம் எக்காரணம் கொண்டும் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் இக்கட்டணங்கள் எமக்கான விளம்பர செலவு பிரயாணச்செலவு தொலைபேசி செலவு என பல்வேறு செலவுகள் இதில் உள்ளடக்கப்பட்டே நாம் செலவு செய்யும் நேரத்தினையும் கருத்தில் கொண்டு அறவிடப்படுகிறது.

உங்கள் தொடர்பு, ஒத்துழைப்பு எமது துரித வளர்ச்சியைப் பெற்றுத்தரும், அது உங்கள், எமது இனத்தின் முன்னேற்றத்திற்கும், நின்மதிக்கும் வழிவகுக்கும்இ சமுதாய நோக்கத்தோடு சிந்தித்துச் செயலாற்றுகின்றோம். எமது முதன்மையான நோக்கம் எமது இனத்தின் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்வதே, அதனால், நேர்மையாகவும், உண்மையாகவும்இ வெளிப்படையாகவும், நாம் செயல்படுகின்றோம். தாங்கள் எதுவிதத்திலும் தயங்காது எப்போதும் அழைக்கலாம். தாரமிழந்தவர்கள், விவாகரத்துச் செய்தவர்களும் மறுமணம் செய்ய எம்மை அழைக்கலாம்.

இது உலகத் தமிழருக்கான திருமணச்சேவையாகும் எனவே, ஈழத்தமிழர்கள் அனைவருக்குமானது என்பதை மறக்காதீர்கள். உங்கள் ஆதரவை எமக்கு வழங்குங்கள், நாமும் எமது மக்களின், எமது இனத்தின் வளர்ச்சியிலும், மகிழ்ச்சியிலும், அக்கறையுள்ளவர்கள் என்பதை நீங்கள் போகப்போகப் புரிந்து கொள்வீர்கள்.  நன்றி. பணிவன்பை வளர்ப்போம்……

error: Content is protected !!